Subscribe
Share
Search
Back To Top
Scroll To Discover
top

White And Black

மரங்களின் சத்தம்

ஏறத்தாழ 258 மரங்களுக்கும் மேல் வர்தா புயலால் சாலையில் சாய்ந்துள்ளன, 300 மேற்பட்ட பகுதிகளில் பாதிப்புகள். மனிதனைக் காற்றும் நீருமே அதிகமாகக் கொல்கின்றன. காற்றையும், நீரையும் மாசுபடுத்தியதன் விளைவு அவனையே வந்து சேர்கிறது.

 

சூறாவளியின் வகைகள்

  1. வகை 1: காற்று மற்றும் பலத்த காற்று 90-125kph, வீட்டில் சேதம், மரங்கள் மற்றும் பயிர்களில் சில சேதம்.
  2.  வகை 2:  பலத்த காற்று 125-164 kph சிறிய அளவில் வீடுகளில் சேதம், கணிசமான சேதம், மின் தடையினால் பயிர்கள் மற்றும் வணிகதுக்கு ஆபத்து
  3. வகை 3: மிகவும் பலத்த காற்று 165-224 kph, கூரை மற்றும் கட்டமைப்புகளில் சில சேதம், மின் தடையினால் பயிர்கள் மற்றும் வணிகதுக்கு ஆபத்து
  4. வகை 4: மிகவும் பலத்த காற்று 225-279 kph கூரை மட்டும் கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க இழப்பு மற்றும் சேதம்,  வீசி எறியப்பட்ட அதிக பரப்பளவிலான மின் துண்டிப்புகள்
  5. வகை 5: வன்காற்றுகள்  280 kph-க்கும் அதிகமான காற்று மிகவும் ஆபத்தான பரந்த பரப்பளவிலான அழிவு  (from www.insightsonindia.com)

 

உங்களின் இடையூறாக நாங்கள் உருவானது எவ்வாறு

நகரத்தைச் சுற்றிய பகுதிகளில் 35% பசுமைத் தாவரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. காற்றையும் நிலத்தையும் சுத்தம் செய்யும் தாவரங்கள் இல்லாமல் எப்படி உங்களால் இதிலிருந்து தப்ப முடியும்.

  1. நகரங்களில் நாளுக்குநாள் நெருக்கடி அதிகமாவதால் கட்டடங்கள் அதிகரிக்கின்றன. கார்பன் வெளியீடு அதிகமாகிறது. இதனால் வெப்பமாதல் அதிகரிக்கிறது.இது ஒருபுறம்
  2. மணல் பரப்பு குறைந்து கொண்டே போவதால், தாவரங்கள் வேர் ஊன்றி வளர்வதற்கு பெரும் இடையூறாக இருக்கிறது. இதனால் காற்று பலமானதாக இருக்கின்ற போது சாய்த்துவிடுகின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது
  3. வளர்க்கப்படுகிற மரங்கள் பலமற்றதாக, பார்வைக்காக மட்டும் வளர்ப்பதாலும் நாங்கள் காற்றில் எளிதில் சாய்ந்து மடிக்கின்றோம்.
  4. அசைவ உணவுப் பிரியர்களின் பட்டியலில், மீன் வகையை சேர்ந்த இறாலுக்கு (Prawns) முக்கிய இடம் உண்டு.உள்நாட்டு விற்பனை மட்டுமின்று வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படு வதன் மூலமும், பெரும் அந்நிய செலாவணியை இறால் ஈட்டித் தந்துக்கொண்டிருக்குறது. தமிழகத்தில் தொழிலதிபர்கள், லாபம் ஈட்ட செயற்கை இறால் பண்ணைகளை துவங்கினர். நிலத்தை ஆக்கிரமித்து இறால் பண்ணை நடத்தி லாபம் கொழிக்கிறார்கள். கடலில் கலக்கும் கரிப்பு நீரால் வைக்கப்பட்ட மரங்கள் பட்டு போகின்றது. பட்டுப்போன மரங்கள் பலத்த காற்றில் சாய்ந்து மடிக்கின்றோம். சாலையிலும் பிற இடங்களிலும் மக்களாகிய உங்களுக்கு இடையூறாக உருவேடுத்தோம்

தற்போது சென்னை சந்தித்தது வருகின்ற இந்நிலை, பிற கடலோர நகரங்களுக்கு ஏற்படாமல் இருக்கவும் பலமிக்க வேர்களையுடைய மரங்கள் காற்றின் சீற்றத்தைய் சற்று குறைத்துவிடும் அரணாகவும் கூட மரங்களாகிய நாங்கள் உண்டு

உங்கள் மனதில் எங்களின் சத்தம் ஒலித்ததா?

Post a Comment